நண்பர்களுடன் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்த நபருக்கு 60 ஆண்டுகள் சிறை..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தை, தம்பியுடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தையிடம் சண்டையிட்டு வந்ததன் காரணமாக சிறுமியின் தாய் சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியை அவரது தந்தை மற்றும் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பம் அறிந்த அப்பகுதியினர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரை அடுத்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, சிறுமியின் தந்தை, குளத்துக்கடை அருணாச்சலம்(35),மணிகண்டன் (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.அப்போது, சிறுமியின் தந்தைக்கு போக்ஸோ, பலாத்காரம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் தலா 20 என மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதுபோல அருணாச்சலத்துக்கு 40 ஆண்டுகளும், மணிகண்டனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.சம்பவம் நடந்து இரண்டே ஆண்டுகளில் வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Comments

Popular Posts